“Best Senior Faculty Award”
Appreciation to Dr. K.S. Dhivya
Dr K.S. Dhivya, Assistant Professor and HOD of PG & Research Department of English got “Best Senior Faculty Award” on 6th December 2021 for her academic contribution in Language and Literature under the category of “English”. This award was given by Novel Research Academy, Puducherry. She is greeted.
தன்னிகரற்ற தமிழன் விருது பெற்ற டிரினிடி கல்லூரி ப் பேராசிரியைக்கு பாராட்டு
தன்னிகரற்ற தமிழன் விருது பெற்ற டிரினிடி கல்லூரி ப் பேராசிரியைக்கு பாராட்டு –
நாமக்கல் – டிரினிடி மகளிர் கல்லூரி (கலை மற்றும் அறிவியல்) ஆங்கிலத் துறையின் உதவிப்பேராசிரியை எஸ் . பூர்ணிமா “தன்னிகரற்ற தமிழன் விருது” பெற்றமைக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்விற்கு கல்லூரித் தலைவர் திரு பி. எஸ். கே. செங்கோடன் தலைமை தாங்கினார் .
செயலர் திரு. கே. நல்லுசாமி முன்னிலை வகித்தார் .
கல்லூரி முதல்வர் எம் . ஆர் . லட்சுமிநாராயணன் வரவேற்புரை வழங்கினார் .
இயக்குனர் – உயர்கல்வி அரசுபரமேசுவரன் வாழ்த்துரை வழங்கினார் .
போர்முனை, அஞ்சல் டுடே மற்றும் பிற பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 26.12.2021 அன்று சென்னை – கலைவாணர் அரங்கில் இக்கல்லூரி பேராசிரியை எஸ் பூர்ணிமாவிற்கு சிறந்த ஆசிரியர் பிரிவில் தன்னிகரற்ற தமிழன் விருது வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவர் தமிழக அரசு நடத்திய மாநில அளவிலான தேர்தல் போட்டியில் முதலிடமும், தேர்தல் குறித்த சிறந்த வாசகங்கள் எழுதியமைக்காக இரண்டாமிடமும் பெற்றதற்காக தமிழக முன்னாள் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களிடம் இருந்து தேசிய வாக்காளர் தினமான 26.01.2021 அன்று சிறப்பு பரிசினையும் பெற்றுள்ளார் . மேலும், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விருதுகளையும் இவர் பலப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாக அலுவலர் என் எஸ் செந்தில்குமார், ஆங்கிலத்துறை பேராசிரியைகள் கே எஸ் திவ்யா, பி உமாபாரதி , ஜி கண்ணகி, ஏ ரேவதி , எல் தீபிகா , ஆர் பானுப்ரியா, எஸ் பாரதி எஸ் மலர்க்கொடி, எஸ் ஸ்ரீ வித்யா, ஆர் பிரியதர்ஷினி ஆகியோரும் கலந்து கொண்டு இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.